இந்த தாழமுக்கம் நாட்டை ஊடறுத்து செல்லவுள்ள நிலையில் நாட்டின் பல பாகங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. கடலுக்குச் செல்லும் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
நேற்று தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 8 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு கிழக்கு கடற்கரை ஊடாக இலங்கையினுள் நுழைந்துள்ளது. இந்த தாழக்கம் இலங்கையை ஊடறுத்து நாளை காலை கன்னியாகுமரியின் கொமோரின் பிரதேசத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment