Ads (728x90)

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கடுமையான மருந்து தட்டுப்பாடுகளை எதிர்கொள்ளுகின்றன என இலங்கையின் பிரதான மருத்துவர் சங்கத்தின் பேச்சாளர் ரோய்ட்டரிடம் தெரிவித்துள்ளார்.

வெளிநோயாளர் சேவைகளுக்கு அடிப்படையான பராசிட்டமோல், வைட்டமின் சி மற்றும் சேலைன் போன்றவற்றை வழங்குவதில் கூட சிரமம் உள்ளது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வாசன் இரத்னசிங்கம் தெரிவித்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புற்றுநோய், கண் மருத்துவமனைகள் போன்ற சிறப்பு வசதிகளை கொண்ட மருத்துவமனைகள் நன்கொடையில் இயங்குகின்றன என்றும் இரத்னசிங்கம் தெரிவித்ததாக ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget