Ads (728x90)

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். 

விலைச்சூத்திரத்திற்கு அமைய இவ்வாறு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5kg எரிவாயு சிலிண்டர் ரூபா. 4,360 இலிருந்து 4,610 ரூபாவாகவும்,

5kg எரிவாயு சிலிண்டர் ரூபா. 1,750 இலிருந்து 1,850 ரூபாவாகவும், 

2.3kg எரிவாயு சிலிண்டர் ரூபா 815 இலிருந்து 860 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது 12.5kg 250 ரூபாவினாலும், 5kg  100 ரூபாவினாலும், 2.3kg  45 ரூபாவினாலும் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget