Ads (728x90)

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில்களை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் 30-11-2022 திகதி இதற்கான கடிதம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் புலமைப்பரிசில்களை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget