Ads (728x90)

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நாட்டின் சகல விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட 8 பில்லியன் ரூபா நிதியை விவசாயிகளின் வங்கி கணக்கில் வைப்பிலிடும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இம்முறை பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அவற்றில் 7 இலட்சத்து 60 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் தற்போது வரை நெல் பயிரிடப்பட்டுள்ளது.

இவ்விவசாய குடும்பங்களின் எண்ணிக்கை 1.2 மில்லியனாகும். கடந்த பெரும்போகத்தின் அறுவடையில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 8 பில்லியன் ரூபா இலங்கைக்கு வழங்கப்பட்டது.

ஒரு ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்ட விவசாயிகளுக்கு 10,000 ரூபாவையும், இரண்டு ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்டோருக்கு 20,000 ரூபாவையும் அவர்களின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடுமாறு விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியிருந்தார். இன்றைய தினம் அதற்கான செயற்பாடுகள் விவசாய அமைச்சில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget