Ads (728x90)

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவை மூன்று வருடங்களின் பின்னர் மீண்டும் இன்று முதல் ஆரம்பமாகியது.

கடந்த நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை 2019 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டது. 

மூன்று வருடங்களின் பின்னர் இன்று காலை சென்னையில் இருந்து முதல் விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

முதல் விமானம் காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அலையன்ஸ் ஏயார் விமானம் காலை 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும் நான்கு விமான சேவைகள் நடைபெறவுள்ளன.



Post a Comment

Recent News

Recent Posts Widget