Ads (728x90)

2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆயுள் தரவு முறையை புதுப்பிக்காத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தப்படும் என ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் அனைத்து மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கைச் சான்றிதழை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பது குறித்து கிராம அதிகாரிகளுக்கு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தலை விடுத்துள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

ஓய்வூதியம் பெறுவோர் தாம் கையொப்பமிட்ட படிவத்தை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளரிடம் கையளிப்பதுடன், அந்தத் தகவலின் அடிப்படையில் ஓய்வூதிய உத்தியோகத்தர்கள் தரவு அமைப்பை புதுப்பிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாழ்நாள் சான்றிதழை உறுதி செய்ய கையொப்பமிடாத ஓய்வூதியர்களின் பதிவேட்டை பெப்ரவரி 20 ஆம் திகதி சம்பந்தப்பட்ட கிராம அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், கிராம உத்தியோகத்தர்கள் உரிய ஆவணத்தை பூர்த்தி செய்து பிரதேச செயலாளரிடம் மார்ச் 31 ஆம் திகதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget