Ads (728x90)

இலங்கை இராணுவத்தின் தற்போதுள்ள 200,783 ஊழியர்கள் தொகையை இவ்வருடம் 135,000 ஆக குறைக்க எதிர்பார்க்கப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2030 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்கவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் செலவுகளை குறைப்பதன் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை குறைக்கும் எதிர்கால திட்டம் பாதுகாப்பு அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் தற்போது 200,783 ஆக இருந்தாலும், அது 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆகக் குறைக்கப்பட்டு 2030 ஆம் ஆண்டளவில் அது 100,000 ஆக குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.


    2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு இணையாக எந்தவொரு பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் உரிய சமநிலையான இராணுவப் பலத்தை உருவாக்குவதே இந்த மூலோபாயத் திட்டத்தின் நோக்கமாகும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget