Ads (728x90)

திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாட்டு நடவடிக்கைகளை செல்லுபடியற்றதாக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு வலியுறுத்தி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயத்தை கூறியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ். துரைராஜா மற்றும் ஜனக்க டி சில்வா ஆகியோரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது திட்டமிட்டவாறு உரிய நேரத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

குறித்த மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.


 


Post a Comment

Recent News

Recent Posts Widget