Ads (728x90)

காங்கேசன்துறை துறைமுகம் உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வௌியிடப்பட்டுள்ளது. 

காங்கேசன்துறை மற்றும் புதுச்சேரிக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. 

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் 15 ஆம் திகதிக்கு பின்னர் நடுப்பகுதியில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.  



Post a Comment

Recent News

Recent Posts Widget