Ads (728x90)

அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களில் சேவையாற்றிய 30,000 ஊழியர்கள் இன்றுடன் ஓய்வு பெறுவதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

பிரதமரின் செயலாளர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய ஓய்வுபெறும் அரச ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 60 வயது பூர்த்தியடைந்துள்ள 300 ஊழியர்களை தேவையின் நிமித்தம் தொடர்ந்தும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் அமர்த்துவதற்கு ரயில்வே திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் செயலாளரின் தலைமையிலான குழு மற்றும் ஜனாதிபதி செயலாளரின் பரிந்துரைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரயில் சாரதிகள், உதவியாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், தொழில்நுட்ப மற்றும் நடவடிக்கை பிரிவு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தேவைக்கு அமைய சேவைக்கு மீள அமர்த்தப்படவுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget