Ads (728x90)

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் நீண்ட கால கோரிக்கைக்கு சீனா நேற்று பதிலளித்துள்ளது.

சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான கடன்களுக்கு பொறுப்பான சீனாவின் எக்சிம் வங்கி, சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடன்களை இரண்டு வருட காலத்துக்கு இடைநிறுத்தம் செய்யும் என்று தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்தியா அறிவித்த நிலையில் சீனா இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.

சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநர்களாவர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget