Ads (728x90)

செலவின் அடிப்படையிலான மின்சார கட்டண சூத்திரத்தை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆலோசனையுடன் அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. 

இந்தநிலையில் செலவின் அடிப்படையிலான மின்சார கட்டண சூத்திரத்தை அமுல்படுத்துவதற்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் இந்த செயற்பாடு அமுல்படுத்தப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget