வேலன் சுவாமிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏசுமந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்நிலையில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்ட போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர். அதன் போது பொலிஸாரின் தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டனர்.
அதன் போது பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர். அவ்வேளை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினார் என குற்றம் சாட்டி பொலிஸாரினால் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment