Ads (728x90)


உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதென தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாதையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தமிழரசு கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ.சுமந்திரன், ஆர்.இராகவன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் ரெலோ,  புளொட் ஆகியன இணைந்து போட்டியிட வேண்டுமென வலியுறுத்தின. எப்படி போட்டியிடுவது என பேசப்பட்ட போது கடந்த தேர்தலை எதிர்கொண்டதை போல எதிர்கொள்ளலாம் என ரெலோ கூறியது. 

எனினும் கடந்த முறை தமக்கு உறுதியளிக்கப்பட்ட சபைகள் வழங்கப்படாததால் அது பற்றி மீள பேசப்பட வேண்டுமென புளொட் தெரிவித்தது. தமிழரசு கட்சி தேர்தல் நெருங்கி விட்டதால் அதைபற்றி பேச அவகாசமில்லையென தெரிவித்தது.

இணக்கமாக செயற்பட தயாரெனில் கிளிநொச்சி மாவட்டதிலுள்ள 3 சபைகளை, 3 கட்சிகளும் ஆளுக்கொன்று வீதம் பகிரலாம் என பங்காளிக் கட்சிகள் யோசனை தெரிவித்தனர். எனினும் இறுதியில் தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்தது.




Post a Comment

Recent News

Recent Posts Widget