Ads (728x90)

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை 7 நாட்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதனை 7 நாட்களுக்குள் செய்யாதவிடத்து அரசுடன் பேசுவதில்லை எனவும் தமிழ் கட்சிகள் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளனர். 

இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று மாலை கூடிய தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமசந்திரன், கே.எம்.சிவாஜிலிங்கம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் குறித்த கூட்டத்தில் பங்கேற்றனர். 

இன்று 10ஆம் திகதி அரசாங்கத்திற்கும், தமிழர் தரப்பினருக்குமிடையில் பேச்சுக்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் கலந்துரையாடலின்போது முன்வைக்கப்படவேண்டிய விடயங்களை ஆராய நேற்று தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தன.

இதன்போது அரசியலமைப்புக்கு அமைவாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், பிடுங்கப்பட்ட அதிகாரங்களை மீளளிக்கவும் அரசாங்கத்திற்கு குறுகிய கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget