Ads (728x90)

அரசாங்கத்தினால் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஊழியர்கள் நேற்று முன்தினம் மத்திய வங்கிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது அரசாங்கத்தினால் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தங்களின் பிரகாரம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானம் பெறும் அனைவரும் வரி செலுத்தவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருப்பதுடன் வருமானத்தில் பெருந்தொகையை வரியாக செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வரி அமுலாக்கம் தொடர்பில் பல்வேறு துறையினரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் நிலையில் மத்திய வங்கியின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பினால் மத்திய வங்கிக்கு முன்பாக மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள் எவ்வித அர்ப்பணிப்பையும் செய்யாமல் ஊழியர்களிடம் மாத்திரம் அசாதாரணமான முறையில் வரி அறவிடுவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல என்று சுட்டிக்காட்டிய அவர்கள், இவ்விவகாரத்துக்கு நியாயமான தீர்வொன்று வழங்கப்படாவிட்டால் தமது போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர்.                    



Post a Comment

Recent News

Recent Posts Widget