2022 தரம் 5 புலமைப் பரீட்சைக்கு 329,668 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இவற்றில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 48,257 ஆகவுள்ளது. வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம் 14.64%.
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் எண்ணிக்கை 17,622. வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 2,749. இதன் சதவீதம் 15.6%. இதன்படி வட மாகாணம் தேசிய மட்டத்தில் 6 வது நிலையை பெற்றுள்ளது.
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வலயங்களின் தேசிய மட்டத்தின் நிலை யாழ். கல்வி வலயம் முதல் நிலையையும் (25.37%), பொலநறுவை கல்வி வலயம் இரண்டாம் நிலையையும் (21.71%), தங்காலை கல்வி வலயம் மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளது.
Post a Comment