Ads (728x90)

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இன்று அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.

பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி மீள் பரிசீலனை செய்யும் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீள் பரிசீலனையின் போது மீண்டும் மின் கட்டணம் குறைவடைவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் கூறினார்.

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான யோசனை இன்று மாலை தங்களுக்கு கிடைக்கப்பெற்றதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget