Ads (728x90)

இலங்கையில் தற்போது அனைத்து விதமான போராட்டங்களும் தடுக்கப்படுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை சுதந்திரத்துக்கு பின்னர் எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்த்து காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகப்பகுதியில் இடம்பெற்ற போராட்டம் மௌனமாகி நீண்ட நாளாகிவிட்டது.

தற்போது நாட்டில் ஒரு வகையான போலி நிலைத்தன்மை உள்ளதாக பிபிசியின் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் இலங்கையர்கள் கடுமையான உணவு, எரிபொருள் மற்றும் பிற அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டனர்.

நீண்ட எரிபொருள் வரிசைகள் மற்றும் மின்சாரத் தடைகள் பல மாதங்களாக வெகுஜன அமைதியின்மையைத் தூண்டியது. 

ஜூலை மாதம் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ பணியிடம் மற்றும் வசிப்பிடம் என்பன மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. இறுதியில் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தநிலையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டமானது அனைத்து இலங்கையர்களையும் ஒன்றிணைத்த சுதந்திரப் போராட்டமாகும் என அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் பிபிசியின் தொகுப்பில் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையாக இப்போது நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் உண்மையான காரணங்களுக்கு தீர்வுக்காணப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.

ஊழல் இன்னும் நடைபெறுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மருந்து தட்டுப்பாடு போன்ற உண்மையான பிரச்சினைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பிற்கு வெளியே, உணவு செலவுகள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகளில் வெகுஜன எதிர்ப்புக்கள் விரைவில் வெடிக்கும் என்றும், அது ஆபத்தானதாக இருக்கலாம் என்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து எச்சரிப்பதாக பிபிசியின் செய்தித்தொகுப்பு தெரிவிக்கிறது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget