Ads (728x90)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனு தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு கடந்த 4ஆம் திகதி அறிவித்திருந்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்கள் தொடர்பான அறிவித்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கிடைக்கப் பெற்றதையடுத்து அதற்கேற்ப கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்தன.


Post a Comment

Recent News

Recent Posts Widget