Ads (728x90)

இலங்கையின் பிரதான கடன் வழங்குனர்களாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பானிடமிருந்து கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றுள்ளது என வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரால் அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் என்பவற்றுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டு வருவதாகவும் அந்த இணக்கப்பாட்டுக்கு அமைய சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இவ்வாண்டின் முதற் காலாண்டுக்குள் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget