எட்டாம் தரத்திலிருந்து செயற்கை நுண்ணறிவு பாடம் அறிமுகம் செய்யப்படுவதோடு தரம் 6 முதல் தரம் 13 வரை பாடத்திட்டத்தையும் புதுப்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு பாடம் விருப்பத்திற்குரிய பாடமாக சேர்க்கப்படுவதுடன், மாணவர்கள் அந்த பாடத்தை தகவல் தொழில்நுட்பப் பாடங்களுடன் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் கொள்கைக்கு அமையவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி இரண்டு வாரங்களில் பெறப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment