தரைமட்டமான ஆயிரக்கணக்கான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ள உயிர்பிழைத்தவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகிறார்கள்.
கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் தென்கிழக்கு துருக்கி மற்றும் போரினால் நாசமடைந்த சிரியாவின் வடக்கு பகுதிகளை தரைமட்டமாக்கிய இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட மீட்புப்பணிகள் இன்னமும் தொடர்ந்து வருகிறது.
இரு நாடுகளிலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வரும் நாட்களில் மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
Post a Comment