காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்குமாறு கோரியும், நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் கல்வி அமைச்சிற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே மற்றும் 48 பௌத்த பிக்குகள் உட்பட 57 பேரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment