Ads (728x90)

திறைசேரியினால் நிதி விடுவிக்கப்படாமை போன்ற காரணிகளினால் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறாதெனவும் தேர்தலுக்கான தினம் மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்ள தலையீடு செய்யுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதற்கும் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை இது தொடர்பில் தீர்மானிப்பதற்காக முற்பகல் 10.30 மணியளவில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.





Post a Comment

Recent News

Recent Posts Widget