Ads (728x90)

ஒரு கிலோ நெல்லை நூறு ரூபா வீதம் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மற்றும் பரந்தனில் நடைபெற்ற நெல் அறுவடை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

பரந்தன் வயல்வெளிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்குள்ள விவசாயிகளிடம் நெற்செய்கை தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு தேவையான உரங்களை அரசாங்கம் துரிதமாக வழங்கியது. எனவே, இம்முறை பெரும் போகத்தில் மேலதிக நெல் அறுவடை கிடைக்கும் என நம்புகிறோம். அதற்கமைய ஒரு கிலோ நெல்லை 100 ரூபா உத்தரவாத விலைக்கு அரசாங்கத்தின் ஊடாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விளைச்சல் அதிகரித்தாலும் அரிசி வாங்குவதற்கு பொருளாதார பலம் இல்லாத பிரிவினர் உள்ளனர். எனவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருபது இலட்சம் குடும்பங்களுக்கு 10 கிலோ கிராம் அரிசியை இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget