Ads (728x90)

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22, 23, 24ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிட அரச அச்சகம் மறுத்துள்ளதால் திட்டமிட்டபடி இன்று முதல் தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க முடியாது என கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget