Ads (728x90)

இன்று முதல் 66 சதவீதம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஆணைக்குழுவின் ஏனைய மூன்று உறுப்பினர்களான செயலாளர் சத்துரிக்கா விஜேசிங்க, டக்ளஸ் என். நாணயக்கார மற்றும் எஸ்.ஜி. சேனாரத்ன ஆகியோரின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு 287 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில் 66 சதவீதம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கான பிரேரணை ஜனவரி 02 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டது. எனினும் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவின்படி கட்டண உயர்வு 36 சதவீதம் வரை மட்டுப்படுத்தப்பட்டு கூடுதல் வருமானத்தை 142 பில்லியன் ரூபாவாக்கியது.

ஆனால் மின்சார சபையின் கட்டண முன்மொழிவுக்கு அமைய மேலதிகமாக மின்சார நுகர்வோரிடமிருந்து வருடாந்தம் 288 பில்லியன் ரூபா வருமானமாக திரட்டப்படவுள்ளது.

இந்நிலையில் இலங்கை மின்சாரசபை முன்மொழிந்த பிரேரணையின்படி 90 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் மின்சார நுகர்வோர் 250 சதவீத கட்டண உயர்வை எதிர்கொள்வர் என்று பொதுப்பயண்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

புதிய மின் கட்டண திருத்தங்களுக்கு அமைவாக,
60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணம் 276 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணத்திற்கு இதுவரை நடைமுறையிலிருந்த 680 ரூபா கட்டணத்தொகை 2560 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

புதிய கட்டணத் திருத்தத்திற்கு அமைவாக, 30 அலகுகள் பயன்பாட்டை கொண்ட வீடொன்றுக்கு இதுவரை காணப்பட்ட 360 ரூபா மின் கட்டணம் 1300 ரூபா வரை அதிகரிக்கப்படும். இது 261% அதிகரிப்பாகும்.

90 அலகு பயன்பாட்டிற்காக இதுவரை அறவிடப்பட்ட 1800 ரூபா மின் கட்டணம், புதிய திருத்தத்திற்கு அமைவாக 4430 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

200 அலகுகளுக்கும் மேற்பட்ட மின்சார பாவனையைக் கொண்ட வீடுகளுக்காக மின் கட்டணம் 32 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண திருத்தத்தின் கீழ் சாதாரணமாக வீடொன்றில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 900 அலகிற்கான பிரிவிற்குள் உள்ளடங்கி மின் கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget