2023/24 கல்வியாண்டிற்கான நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 05 முதுகலை (பிஎச்டி) புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
2023/24 கல்வியாண்டிற்கான மௌலானா ஆசாத் புலமைப்பரிசில் திட்டம் மற்றும் நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்திய அரசு 55 முதுகலை புலமைப்பரிசில்களையும் வழங்கவுள்ளது.
மேலும் 2023/24 கல்வியாண்டிற்கான நேரு நினைவு மற்றும் ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 95 இளங்கலை புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
இலங்கைப் பிரஜைகளுக்கு 200 முழு நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்கள், மருத்துவம், பாராமெடிக்கல், பேஷன் டிசைன் நெறிகளும் இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்பதற்காக வழங்கப்படுகின்றன.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை 08 மார்ச் 2023 தகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Post a Comment