இனிமேல் 24 மணித்தியாலங்களும் தடையில்லாமல் மின்சாரம் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் 24 மணித்தியாலங்களும் தடையில்லாமல் மின் விசியோகத்தை மேற்கொள்ள வேண்டுமாயின் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை மீண்டும் வலியுறுத்தியது.
இலங்கை மின்சார சபையின் நீண்ட கால கடனை திருப்பி செலுத்துவதற்காக மின்கட்டணம் 66 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது என தொழிற்சங்கத்தினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.
மின்கட்டணத்தை 66 சதவீதத்தால் அதிகரித்து இலங்கை மின்சார சபையின் நட்டத்தை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. மின்னுற்பத்திக்கான செலவுகளை முகாமைத்துவம் செய்வதற்காகவே மின்கட்டணம் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மின்கட்டணத்தை அதிகரித்துள்ளமை ஆளும் தரப்பு வேட்பாளர்களுக்கும்,அரசாங்கத்திற்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இலங்கை மின்சார சபை,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீ லங்கன் எயார் லைன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு திறைசேரி நிதி வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அதற்கமைய இனி 24 மணித்தியாலமும் தடையில்லாமல் மின்சாரம் விநியோகிக்கப்படும் அத்துடன் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர், மத தலங்களுக்கு மின்விநியோகத்தில் விசேட நிவாரணம் வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Post a Comment