Ads (728x90)

பொதுத்தேர்தல் வாக்களிப்பு குறித்து ஜனவரியில் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் ஐக்கிய மக்கள் சக்திக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது. ஐஎச்பிஸ்லொட்ஸ் கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வாக்காளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின்போது 32 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்திக்கும், 31 வீதமானவர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவ்விரு கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றை பின்தள்ளி முன்னிலையில் காணப்படுகின்றன.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஐக்கிய தேசிய கட்சிக்கான ஆதரவு ஐந்து வீதத்தினால் அதிகரித்துள்ளதை கருத்துக்கணிப்பு புலப்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கான ஆதரவு 11 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பொதுதேர்தல் வாக்களிப்பு குறித்த மன உணர்வு உள்ளுராட்சி தேர்தலில் தென்பட்டால் தேசிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் சக்தியும் அனேக இடங்களில் வெற்றிபெறும் என்பது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget