பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பெருந்தொகையான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
துறைமுகங்கள், பெற்றோலியம், மின்சாரம், வங்கிகள் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் ஊழியர்கள் அதிகளவானோர் இப்போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு, காலி முகத்திடல் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு பிரவேசிக்க ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள 08 தொழிற்சங்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இத்தடையுத்தரவு மு.ப. 11.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்தின் வரிக்கொள்கை மற்றும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று முதல் கறுப்பு வாரத்தை அறிவித்துள்ளன.
கனியவளம், துறைமுகம், குடிநீர், மின்சாரம், வங்கித்துறை, மருத்துவம் உள்ளிட்ட தொழிற் சங்கங்களினால் இந்த கறுப்பு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment