Ads (728x90)

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் 04ஆம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று யாழ்.பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெப்ரவரி 04ஆம் திகதி கடைகள், வர்த்தக நிலையங்களை பூட்டி போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஹர்த்தால் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 04ஆம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி இடம்பெறவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget