Ads (728x90)

பாராளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்ற நிலையில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினர் பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

‘தேர்தலுக்கு பயந்த அரசாங்கமே தேர்தலை நடத்து’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி உள்ளிட்ட எதிரணிகள் இணைந்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

இதனையடுத்து சபாநாயகர் சபை நடவடிக்கையை நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைத்தார். தேயிலை சபை சட்டத்தின் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 4 கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழான உத்தரவுகள் குறித்து இன்று விவாதிக்கப்பட இருந்த நிலையிலேயே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget