வாக்குச்சீட்டு உள்ளிட்டவற்றை அச்சிடுதல் உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்கு போதிய நிதி வழங்கப்படாமை, அது தொடர்பான போக்குவரத்து உள்ளிட்ட விடயங்களுக்கு அவசியமான உரிய வசதிகள் செய்து தரப்படாமை உள்ளிட்ட விடயங்கள் காரணமாக குறித்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக நகர்த்தல் பத்திரம் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்நிலை காரணமாக பெப்ரவரி 22, 23, 24, 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பையும் காலவரையறையின்றி பிற்போடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment