யாழில் இன்று நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுக்கு எதிரான போராட்டத்திற்கு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்.நகரிலும், யாழ்.பல்கலைகழக முன்றலிலும் போராட்டம் நடத்த மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறும் சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்க சில தமிழ் கட்சிகளும் தீர்மானித்துள்ளன. நிகழ்வுக்கு சகல தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளும் அழைப்பை நிராகரித்து தாம் புறக்கணிப்பதாக அறவித்திருக்கின்றன.
Post a Comment