Ads (728x90)

உடல் சூடு அதிகமாவதால் உடலில் உள்ள நீர் வரண்டுபோய், சிறுநீர் கழிக்க சிலர் சிரமப்படுவர். இப்பருவத்தில்தான் சிறுநீர் தொற்றுநோய்களும் அதிகம் பரவுகிறது. இவர்கள் இளநீரைப் பருக சிறுநீர் தாராளமாகப் போகும். வளரும் குழந்தைகளுக்கும், முதியோருக்கும் இளநீர் சிறந்த மருந்து.

நிறைய மருந்து, மாத்திரைகள் சாப்பிட நேரும்போது கூட இளநீர் சாப்பிட்டால் உடலில் மருந்தின் தாக்கத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. இளநீரில் உள்ள சத்துக்கள் இளநீரிலேயே, இளசாக உள்ள காய்களின் நீர் அதிக இனிப்பு சுவையுடனும்,  முற்றின காய்கள் இனிப்பு குறைவாக இருப்பதையும் காணலாம்.

இளநீரில் சோடியம், பொட்டாசியம், கல்சியம், மக்னீசியம், பொஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் கணக்கிலடங்காது அடங்கியுள்ளது.

இவை தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. தாதுப் பொருட்கள், குறிப்பாகப் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருகக் கூடாது.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின தேங்காயில் உள்ள இளநீரே இவர்கள் பருக உகந்தது.

வெப்பம் அதிகமாகும்போது சருமத்தில் ஏற்படும் வியர்குரு போன்றவற்றின் மீது தடவவும் நல்ல மருந்தாகும். முகத்தின் சரும பாதுகாப்பிற்கும் இளநீர் தடவிக் கொள்வது நன்னை தரும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget