Ads (728x90)

அரசியலமைப்பை மீறி தேர்தலை தடுக்கும் யாரும் எதிர்காலத்தில் தண்டனை அனுபவிப்பார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் ரக்கா வீதியில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவால் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு பிரச்சார பணிகள் நடந்தது நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களிற்கும் தெரியும். அது ஜனாதிபதிக்கு மட்டும் தெரியாது. அவருக்கு தேர்தலை பற்றி எதுவுமே தெரியாது.

தேர்தலுக்கு நிதி வழங்கும் அதிகாரம் என்னிடமில்லை. அப்படி நிதி வழங்குவதாயின் இப்போது நாட்டில் தேர்தலுக்கு அவசியமில்லையென்கிறார்.

இது சர்வாதிகாரமான ஆட்சி முறை. ஜனாதிபதி தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரல்ல. தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும். தேர்தலை பிற்போடுவதால் வாக்களிக்கும் உரிமை தடுக்கப்படுகிறது. 

இது அரசியலமைப்பை மீறும் செயல். அரசியலமைப்பை மீறும் யாரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget