Ads (728x90)

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கை தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது.

தமக்கான வரி சலுகைகளை வழங்கக் கோரி எதிர்வரும் தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ள மிகவும் தீர்க்கமான வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இன்று திங்கட்கிழமை இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க , திறைசேரி செயலாளர், ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் உள்ளிட்டோரும் , தொழிற்சங்க தொழில் வல்லுனர்கள் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட தொழிற்சங்கங்களின் தொழில் வல்லுனர்கள் சங்கம் என்பன தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. இதற்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால் அடுத்த வாரம் முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம். 

இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை 40 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு கூடி இறுதி தீர்மானத்தை எடுக்கும் என ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்க தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget