ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 52 அமர்வில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது ஜெனீவாவிலுள்ள இலங்கையின் ஐ.நாவிற்கான அலுவலகத்தின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலிஅருணதிலக இதனை தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையால் பல பயனற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் 51/1 தீர்மானமும் ஒன்று. சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில் எமது சம்மதம் இல்லாமல் அது நிறைவேற்றப்பட்டதாக கடந்த ஒக்டோபர் மாதம் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார். இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இலங்கை மக்களிற்கு உதவியாக அமையப்போவதில்லை. மாறாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திற்கு அவை பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் உறுப்பு நாடுகளிடம் பற்றாக்குறையாக உள்ள வளங்களை வீணாக்கும் நடவடிக்கை இது என தெரிவித்துள்ள ஹிமாலி அருணதிலக இந்த வளங்களை வேறு நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment