சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக் கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வேலைத்திட்டம் சீர்குலைந்தால் 2022 பெப்ரவரி மாத நிலமையைவிட மிகவும் ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்படலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சாதகமான தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட அரசாங்கம் 2022 மார்ச் நடுப்பகுதியில் தீர்மானித்தது. அந்நியச் செலாவணி நெருக்கடி மோசமடைந்தபோது ஏப்ரல் 2022 நடுப்பகுதியில் வெளிநாட்டுக் கடனைச் செலுத்தும் திறன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இலங்கை ஒரு வங்குரோத்து பொருளாதாரமாக அன்று தொடக்கம் செயற்பட்டது.
நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளை படிப்படியாகத் தீர்க்கும் வகையில் ஸ்திரப்படுத்தல் திட்டம் வகுக்கப்பட்டது. அதற்கு பொருத்தமான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியது.
எரிவாயு மற்றும் பெற்றோல் என்பன வழமை போன்று கிடைப்பதை உறுதி செய்வது, பாடசாலைகள் மற்றும் பரீட்சைகளை உரிய முறையில் நடத்தவது, தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவது, உரங்கள் வழங்குவது, சமுர்த்தி பயனாளர்களுக்கு மேலதிக நிதி வழங்குவது மற்றும் 2019 இல் அமுல்படுத்தப்பட்ட வரிக் கொள்கை மீள செயற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அரசுக்கு நேரிட்டது.
அதேபோல் மத்திய வங்கியின் நிதிக் கொள்கைகளின் கீழ் வட்டி விகிதங்களை உயர்த்த நேரிட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்துவதே எம்மிடமிருந்த சாதகமான நடவடிக்கையாகும். கடந்த ஆண்டு செப்டம்பரில் சராசரி பணவீக்கம் 70% வரை உயர்ந்தது. உணவுப் பணவீக்கம் 90 சதவீதத்தைத் தாண்டியது. ஆனால் தற்போது பணவீக்க வேகம் 50 வீதம் வரை குறைந்துள்ளது. அத்தோடு உணவுப் பணவீக்கமும் 54 சதவீதமாகக் குறைந்துள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பணப் பரிமாற்ற விதிகளை கடுமையாக்கவும், இறக்குமதியை கட்டுப்படுத்தவும் நேரிட்டது.
இவ்வாறு நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் விஷேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
.jpeg)
Post a Comment