Ads (728x90)

பொதுத்தேர்தலால் மாத்திரமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். வீதியில் இறங்கிப் போராடுவதால் அதனை ஏற்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள நாடுகளில் அராஜகம் தலைதூக்கும். பாராளுமன்றம் இல்லாவிட்டால் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இல்லாமல் போகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலன்கள் விரைவில் நாட்டு மக்களுக்கு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை விமானப்படைத் தளத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget