Ads (728x90)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம், நீர்தாரை பிரயோகம் மற்றும் தடியடி பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் ஐ.நா. கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால் இருவர் உயிரிழந்தமைக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டங்களைக் கலைப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரால் உபயோகிக்கப்படும் கண்ணீர்புகைக்குண்டுகள் காலாவதியானவை என்றும் , விஷத்தன்மையுடையவை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget