கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதிய பிணையெடுப்பு இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவுவது சந்தேகமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நீண்ட கால கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான முயற்சியில் இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உயர் மட்ட அரசியலில் உள்ள பெரும்பாலான ஆளுமைகள் பல ஆண்டுகளாக இருந்ததைப் போலவே இன்றும் உள்ளனர். அவர்களிடம் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை 1965 முதல் 16 தடவைகளாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொண்டது. எனினும் அவை அனைத்தும் தோல்வியடைந்தன. பிணை எடுப்பை எதிர்பார்ப்பது தற்காலிக நிவாரணத்தை மாத்திரமே கிடைக்கச்செய்யும். அது நீண்ட காலத்திற்கு உதவாது என்றும் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.

Post a Comment