உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக்க டி சில்வா, பிரியந்த ஜயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அச்சகருக்கு நிதி விடுவிக்காதிருப்பதை தடுக்கும் வகையில் மற்றுமொரு இடைக்கால தடையையும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Post a Comment