எனவே நாட்டின் குழந்தைகள் தொலைந்து போன தலைமுறையாக மாறுவதைத் தடுக்க அரசாங்கமும், உலக சமூகமும் முன்வர வேண்டும் என சேவ் தெ சில்ரன் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரச் சரிவு ஒரு முழு அளவிலான பசி நெருக்கடியாக மாறியுள்ளது. நாட்டில் உள்ள குடும்பங்களில் பாதி பேர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என குழந்தை உரிமைகள் தொண்டு நிறுவனமான சேவ் தெ சில்ரன் கூறுகிறது.
இலங்கையில் பாதி குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உணவு உட்கொள்ளலைக் குறைத்துக்கொண்டிருக்கும் அதே வேளை 2,300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 27 சதவீதத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக பெரியவர்கள் உணவைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர்.
10 குடும்பங்களில் ஒன்பது பேர் தங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர் எனவும் சேவ் தெ சில்ரன் சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment