Ads (728x90)

ஐக்கிய அமெரிக்கா, கனடா மற்றும் மேற்கு இந்தியத்தீவுகளிலும் கூட்டாக நடத்தப்பட்டு வந்த 9ஆவது ஐ.சி.சி ஆண்கள் உலகக்கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் 20 அணிகள் பங்குபற்றிய குழுநிலை போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விறுவிறுப்பை ஏற்படுத்தக்கூடிய சுப்பர் 8 சுற்று இன்று ஆரம்பமாகிறது.

அமெரிக்காவில் குழுநிலை போட்டிகள் நடைபெற்ற போதிலும் சுப்பர் 8 சுற்றுக்கான 12 போட்டிகளும், அதனைத் தொடர்ந்து அரை இறுதிகள் மற்றும் இறுதிப் போட்டியும் மேற்கிந்தியத் தீவுகளில் மாத்திரம் நடைபெறவுள்ளது.

சுப்பர் 8 சுற்று இரண்டு குழுக்களில் நடத்தப்படவுள்ளது. குழு 1இல் இந்தியா (ஏ 1), அவுஸ்திரேலியா (பி 2), ஆப்கானிஸ்தான் (சி 1), பங்களாதேஷ் (டி 2) ஆகிய அணிகளும் குழு 2இல் ஐக்கிய அமெரிக்கா (ஏ 2), இங்கிலாந்து (பி 1), மேற்கிந்தியத் தீவுகள் (சி 2), தென் ஆபிரிக்கா (டி 1) ஆகிய அணிகளும் இடம் பெறுகின்றன.

9ஆவது ரி20 உலகக்கிண்ண அத்தியாயத்தை கனடாவுடனான போட்டியுடன் ஆரம்பித்து வைத்த வரவேற்பு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமெரிக்கா, இப்போது சுப்பர் 8 சுற்றை தென்ஆபிரிக்காவுடனான குழு 2 போட்டியுடன் ஆரம்பித்து வைக்கிறது.

சுப்பர் 8 சுற்றில் இடம்பெறவுள்ள 12 போட்டிகளும் கிட்டத்தட்ட நொக் அவுட்டுக்கு ஒப்பானவையாக அமையவுள்ளது. ஏனெனில் சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றள்ள 8 அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு விளையாடவுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget