Ads (728x90)

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கொழும்பு பத்தரமுல்ல நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக நேற்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருமாறு போராட்டகாரர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

போராட்டத்தை கட்டுபடுத்துவதற்காக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது நீர்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் சுமார் 40,000 பட்டதாரிகள் தொழிலின்றி இருப்பதாக தெரிவித்த அவர்கள் தங்களின் கோரிக்கையை தீர்த்து வைக்குமாறு அரசை வலியுறுத்தினர். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget