Ads (728x90)

2025 ஆம் ஆண்டு முதல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மொத்த மதிப்பெண்ணை இனிமேல் பரீட்சையின் வினாத்தாள்களில் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், தரம் 1 தொடக்கம் 10 வரையான முன்னோடித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் தரம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் பெற்ற கல்வியின் மூலம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும், பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

புதிய உலகின் கல்விப் போக்குகளை மனதில் கொண்டு இந்தக் கல்வி முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாத்தாண்டிய தம்மிஸ்ஸர வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி தொழில்நுட்ப கட்டிடத்தை நேற்று இடம்பெற்ற கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 2500 அதிநவீன ‘ஸ்மார்ட் போர்டுகள்’ வழங்கப்படும் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடசாகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, நட்பு ரீதியான கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரே வலையமைப்பில் இணைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget